This blog has been moved to my personal site Yemkay.com

Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to netvibes

Monday, June 04, 2007

அண்ணாவின் அராஜக போக்கு

இது தான் செய்தி
"அண்ணா பல்கலையில் இந்த ஆண்டு பொறியியல் சீட்டிற்காக விண்ணப்பம் வாஙக ஜீன்ஸ் அணிந்து வந்த ஒரு மாணவிக்கு துணை வேந்தர் நீ ஜீன்ஸ் அணிந்து இருப்ப்தால் உனக்கு விண்ணப்பம் தர மாட்டேன் என்று கூறியிருக்கிறார்... அதன் பின் அந்த மாணவி நான் இனிமேல் ஜீன்ஸ் அணிய மாட்டேன் தயவு செய்து விண்ணப்ப்த்தை கொடுங்கள் என்று கெஞ்சி கேட்ட பின்னரே விண்ணப்பத்தை கொடுத்துள்ளார்."
இந்த விச்சுவின் தொல்லை வர வர தாங்க முடியல. ஜீன்ஸின் மகத்துவம் ஒரு புறம் இருக்கட்டும். மொபைல் ஃபோனுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தம் பிள்ளைகளை எப்படி பெற்றோர் தொடர்பு கொள்வர்? ஹாஸ்டலில் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என்றால், 150 பேருக்கு ஒரு தொலைபேசி உள்ளது. எப்போது தொடர்பு கொண்டாலும், ஒன்று பிஸியாக உள்ளது அல்லது செத்து போய் உள்ளது.

மொபைல் ஃபோனுக்கு ஏன் தடா என்றால் "கேமரா ஃபோனை வைத்து பஸங்க மிஸ்யூஸ் செய்கிறார்கள்" என்கிறார் விச்சு. இந்த காலத்தில் கணிணி மூலமாக செய்யாத தப்பையா மொபைல் மூலமாக செய்து விட முடியும்? அப்படி என்றால் கணிணிக்கும் தடை விதிப்பாரா விச்சு? அப்படியே கணிணி சார்ந்த படிப்புகளையும் தடை செய்து விடுங்கள். ஒரு பிரச்சனையும் வராது.

நாங்கள் படிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கொணர்கிறேன். ஒரு மாணவனின் தங்கச் சங்கிலி அண்ணா பல்கலை வளாகத்தில் வைத்து திருடர்களால் களவாடப்படுகிறது. அம்மாணவன் காவல்துறையில் புகார் கூறுகிறான். பல்கலையின் பெயருக்கு களங்கம் விளைவித்தற்காக பல்கலை நிர்வாகம் அம்மாணவனுக்கு அபராதம் விதிக்கிறது. களவும் கொடுத்து அபராதமும் செலுத்தினான் அம்மாணவன். இது நடந்தது இந்த நூற்றாண்டில் தான்.

இந்த அடக்குமுறை, மாணவர்களுக்கு ஒரு "UnEasy Environment" -ஐ உருவாக்குகிறது. ஆராய்ச்சி பட்டம் பெற்ற விச்சு போன்றவர்களே இப்படி இருந்தால் மற்றவர்களை என்ன சொல்ல?

சமீபத்தில் பிட்ஸ்-பிலானி செல்லும் வாய்ப்பு கிட்டியது. இப்படியும் ஒரு பாடசாலையா என்று வியப்பு கொட்டியது. பிட்ஸிடமிருந்து தமிழக கல்வி நிறுவங்கள் கற்று கொள்ள சில விடயங்கள்,

  • No attendance tracking system. It's upto the student to or not to attend the classes.
  • When we looked into some of the classes, only two or three (mostly girls) were there listening to their professors, who were well equiped with laptops and projectors.
  • The slides used in the classrooms are shared to the entire class via their emails or thro the course homepages in the university Intranet.
  • No dresscode. Of course, students there can't afford wearing Jeans considering the hot weather round the year. University encourages the students to wear caps and sun glasses.
  • Wi-Fied campus.
  • The teaching staffs over there are very down to the earth persons. Infact, it was the Dean who distributed our Disseertation reports by calling out each of us. In Anna university (atleast in ACTech), every professor had a bunch of research scholars (TRA) under them to do these tasks. Most of the times, we would see TRA walking into our class rooms for taking their boss's classes.
  • There is no Student-Professor egoism.
  • Every year, the student has to undertake a indutrial training mandatorily.
  • Every year, BITS offers online degrees for 12,000 professionals.

பிட்ஸ்-பிலானி தன் மாணவர்கள் படிப்பதற்கான ஒரு சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது. ஆனால் இங்கே அராஜகம் தான் தலை விரித்து ஆடுகிறது. விச்சு என்ற தனி மனிதரின் மேல் மட்டும் குற்றமில்லை. மாற்றத்தை எதிர்க்கும் பழமைவாதிகளை கல்விப்பணியிலிருந்து மாற்ற வேண்டும்.

Related Links

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அடிக்கடி எழுத ஆரம்பிச்சுட்ட போல !! good !

//அண்ணா பல்கலையில் இந்த ஆண்டு பொறியியல் சீட்டிற்காக விண்ணப்பம் வாஙக ஜீன்ஸ் அணிந்து வந்த ஒரு மாணவிக்கு துணை வேந்தர் நீ ஜீன்ஸ் அணிந்து இருப்ப்தால் உனக்கு விண்ணப்பம் தர மாட்டேன் என்று கூறியிருக்கிறார்... அதன் பின் அந்த மாணவி நான் இனிமேல் ஜீன்ஸ் அணிய மாட்டேன் தயவு செய்து விண்ணப்ப்த்தை கொடுங்கள் என்று கெஞ்சி கேட்ட பின்னரே விண்ணப்பத்தை கொடுத்துள்ளார்."//

இது எல்லாம் அராஜகம்..படிப்பு, ஆராய்ச்சி தவிர ஒரு பல்கலைக்கழகம் என்ன எல்லாம் பண்ணக்கூடாதோ அது எல்லாம் அங்க உள்ள நிர்வாகிகள் கவனம் இருக்கும் போல..நாம் கொஞ்சம் முன்னால படிச்சதால escape..

see my two year old post at

http://blog.ravidreams.net/?p=205

Karthik said...

Thanks da.
Hmm, I think I should Google first before posting anything. I'm quite late in catching the bus called "BLOGGING"

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

doesn't matter how many else have already written..ur view is always unique and has its space