This blog has been moved to my personal site Yemkay.com

Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to netvibes

Thursday, June 21, 2007

நாஞ்சில் நாட்டுத் தமிழ்


கன்னியாகுமரி மாவட்டதில் மட்டும் வழக்கில் உள்ள தமிழ்ச்சொற்களை பதிக்கலாம் என்ற எண்ணத்தில் கட்டப்பட்டு ஒவ்வொரு சொற்களாக யோசித்து பார்த்தேன். கொஞ்சம் தான் ஞாபகத்தில் வந்தது. சரியென்று கூகுளை கேட்டால், அருமையான மற்றோரு பதிவு கிட்டியது. இப்பதிவில் தென்மாவட்டங்கள் அனைத்திலும் வழக்கில் உள்ள சொற்களை தெரிந்து கொள்ளலாம்.

அதில் மிஞ்சியன சில இதோ..

விளம்பு - பரிமாறு
ஒருவாடு கூட்டம் - ஒரே கூட்டமாக இருக்கிறது
சாடு - தாவு
சோத்தப்பு (சுகத்தப்பு) - உடம்பு சரியில்லை
அனக்கம் - சத்தம்
வாரியல் - துடைப்பம் (விளக்குமாறு)
தூறு - பெறுக்கு
சாரம் - லுங்கி
கோரி குடி - மொண்டு குடி
போஞ்சி - எலுமிச்சை பழரசம்
கழஞ்சி - தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோறு
கழனி - மாடுகள் குடிக்கும் ஒரு வகையான கலவை. சமையலில் வடி கட்டிய தண்ணீர், பழத்தோல்கள் எல்லாம் சேர்ந்தது

சில வகை மீன்கள் : சாளை, துண்டம், பாறை, வாழை
சில வகை பாம்புகள் : எட்டடி வீரன், சாரை,
சில வகை வாழைப் பழங்கள் : கதிலி, பாளையங்கோட்டை, துழுவன், செந்துழுவன் (செவ்வாழை), பேயன்

1 comment:

Madhu said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/