லொள்ளு சபா - "புதுபேட்டை - Survival of the fittest"
விசய் தொலைக்காட்சியில் வரும் லொள்ளு சபாவின் தீவிர ரசிகன் நான். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து, மீண்டும் லொள்ளு சபா ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது (வெள்ளி இரவு 9 மணி). முதல் வாரமே கலக்கி விட்டார்கள். புதுபேட்டை படத்தை அருமையாக கலாய்த்தார்கள். இந்த முறை வித்தியாசமான நகைச்சுவையை கையாண்டிருகிறார்கள். ஒரே மாதிரி உச்சரிக்கும்
சொற்களையும், வசனங்களையும் கோர்த்து டைமிங் காமெடிப் பண்ணியிருக்கிறார்கள். சந்தானம் இல்லாத குறையை அவரைப் போலவே இருக்கும் புதிய நடிகர் தீர்த்திருக்கிறார். வழக்கம் போல மனோகருக்கு அப்பாவித்தனம் நன்றாக வருகிறது.
பிடித்த வசனங்கள் சில,
- நாயகன் : என் பேரு குமாரு
ஒருவர் : கொஞ்சம் நீ சும்மாரு - நாயகன் : என் பேரு கொக்கி குமாரு. கொக்கின்னா என்னா? யாருக்கு தெரியும்
மனோகர் : நான் சொல்றேன். அது கரண் நடிச்ச படம். சுமாராப் போச்சு. - நாயகன் : அண்ணே இட்லி கொடுங்கண்ணே
கடைக்காரர் : காசு?
நாயகன் : காசெல்லாம் வேணாண்ணே. இட்லி மட்டும் கொடுங்க, போதும் - நாயகன் : எதாச்சும் வேல கொடுங்க சார்
ரவுடித் தலைவன் : வேல இல்ல
நாயகன் : அப்ப எல்லாரும் வெட்டியாத் தான் இருக்கீங்களா?
ரவுடித் தலைவன் : டே. ஒனக்கு வேல இல்லன்னு சொன்னேன்
நாயகன் : எனக்கு வேல இல்லேன்னு தான ஒங்க கிட்ட வேல கேட்டு வந்திருக்கிறேன் - ஒருவன் : டே, என் தம்ளர்ல ஊத்து.
மனோகர் : என்னாது. உன் தம்ளர்ல ஊத்தா? அம்பது அடி தோண்டினாலே தண்ணி இல்ல. உன் தம்ளர்ல ஊத்துன்ரே - ஒருவன் : குமாரு, ஒனக்கு அம்மான்னா ரொம்ப புடிக்குமா?
குமாரு : அம்மான்னா யாருக்காத்தான் புடிக்காது
மனோகர் : DMK-க்கு புடிக்காதே - தல : டே, எங்கிட்டயே கத்தியக் காட்றியா? டே அன்பு, கத்தி காட்ரா
(அன்பு "டாய் டாய்..." -ன்னு கத்தி காட்டுகிறார் - ரவுடி : டே பாண்டிலே (- என்று வூடு கட்டுகிறார்)
மனோகர் : பாண்டிலே?
ரவுடி : என் பேரு பாண்டிலே
மனோகர் : பாண்டிலே ஓன் பேரு என்னா?
ரவுடி : (கடுப்பாகி) என் பேரு பாண்டிலே
மனோகர் : அதான் கேக்குறேன். பாண்டிலே ஓன் பேரு என்னா?
வீடியோவை இதோ இங்கேயே கண்டு ரசியுங்கள்....
(இந்த முறையில் வீடியோவைப் பார்ப்பதற்கு பெயர் பிளஸ்பாக்ஸ். இது எப்படி சாத்தியம் என்று அடுத்த பதிவில் விளக்குகிறேன்)
No comments:
Post a Comment